Latest News

January 02, 2015

ஆப்பிள் மீது நூதன வழக்கு!
by Unknown - 0

ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-8, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களான ஐ பேட், ஐ பாட், ஐபோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதன் மூலம், ஐகிளவுட் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் சேமிப்பு சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி பயன்பாட்டாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கலிஃபோர்ணியா நகரில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆப்பிள் நிறுவனக் கருவிகளை வாங்கும் பயன்பாட்டாளர்கள் தமது சொந்தத் தகவல்களை சேமிக்க முடியாத விதத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட அளக்கும் கூடுதலான தகவல் சேமிப்பதற்கான இடத்தை ஆப்பிளின் புதிய இயங்குதளம் ஆக்கிரமித்துக் கொள்கிறது என்று இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐஓஎஸ்-8 காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தயாரிப்புக்களை பணம் கொடுத்து வாங்குபவர்கள் தமது சொந்த விஷயங்களை சேமித்து வைப்பதற்குத் தேவையான அளவுக்கு மெமரி பவர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தகவல் சேமிப்பிற்கான இடம் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் இருப்பதில்லை என்பதே இந்த வழக்கின் அடிப்படை குற்றச்சாட்டாக உள்ளது.

இப்படி பெருமளவில் தகவல் சேமிப்பதற்கான இடத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், ஆப்பிள் நிறுவனம் தனது பாவனையாளர்களின் தகவல்களை சேமிப்பதற்கான வசதியைக் குறைத்து , தமக்கு வருமானம் தரும் வகையில் ஆப்பிள் நடத்தும் ஐ கிளவுட் என்று அழைக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் சேமிப்பு சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி பயன்பாட்டாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சட்டுக்கு ஆப்பிள் நிறுவனம் இன்னமும் பதிலளிக்கவில்லை.
« PREV
NEXT »