நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியுடன் பதவிக்கு வந்த வர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன. நூறு நாட்களுக்குள்ளாக இதற்கு அடிப்படையான கட்டமைப் புக்களை ஏற்ப டுத்தும் அவரது வாக்குறுதி மக்களை ஈர்த் தமைஉண்மையே.
இருந்தபோதிலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு குடும்ப ஆட்சியை முதன்மைப்படுத்தி சர்வாதிகாரப் போக்கில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதனால் விரக்கி யுற்றிருந்த மக்கள் அவருக்கு எதிராக அதிக ளவில் வாக்களித்தனர். கடந்த தேர்தலில் மைத்திரிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை மஹிந்தவிற்கு எதி ரான வாக்குகள் என்பது வெள்ளிடைமலை யாகும்.
இந்த நிலையில் எந்தக்குடும்ப ஆட்சியை மஹிந்தவின் அரசில் மக்கள் வெறுத் தனரோ அதுவே மீண்டும் தலைதூக்கி விடுமோ என்ற அச்சத்தை தருவதாக நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ள நியமனம் அமைந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான குமாரசிங்க சிறிசேன ஸ்ரீலங்கா டெலி கொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளமையே இதற்கு காரணம்.
அரச மரக் கூட்டுஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகா மையாளராகவும் கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் பதவிவகித்திருந்த குமாரசிங்க தனது சகோதரர் பொதுவேட்பாளராக போட்டி யிடுவதற்காக அரசி லிருந்து வெளியேறி யதையடுத்து கடந்த டிசம்பரில் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அரச மரக்கூட்டுத்தாபனம் தவிர வேறும் பல அரச நிறுவனங்களில் குமாரசிங்க சிறிசேன பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்துள்ளார். வர்த்தக முகாமைத்துவத்தி லும் பொதுஜன முகாமைத்துவத்திலும் முதுமானிப்பட்டங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் குமாரசிங்க சிறிசேன இதனைத் தவிர வேறு பல தொழில்சார் தகைமைகளையும் கொண்டுள்ளார்.
இவரது தொழில்சார் அனுபவம் மற்றும் தொழில்சார் கல்வித்தகைமைகள் உயர்ந்த பதவியைக் கையாள்வதற்கு பொருத்தமான வர் என்ற ஒருசாரார் நியாயப்பாடுகளை முன்வைத் தாலும் ஊழல் எதிர்ப்பு குடும்ப ஆட்சி எதிர்ப்பு மற்றும் நல்லாட்சி என்ற அடித்தளத்தில் ஆட்சிக்கு வந்த மைத்திரி பால சிறிசேனவின் மீதான நம்பகத்தன் மையில் ஆரம்பகட்டமான ஐயப்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு இந்த நியமனம் வழி கோல வேசெய்யும்.
எனவே, நல்லாட்சி, ஜனநாயகம் ஆகிய வற்றுக்கே புதிய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாறாக அரசியல் நியம னங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு உயர் பதவிகளை வழங்குதல் போன்ற செயற் பாடுகளில் அது ஈடுபடுமானால், மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோகம் இழைக் கும் செயலாகிவிடும்.
நன்றி சுடர் ஒளி
நன்றி சுடர் ஒளி
Social Buttons