வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ புரிந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசியல் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறியமையே மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்திருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தமது நோக்கமாக அமைந்துள்ளது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது சுய இருப்பிற்காக பிரச்சினைகளை பூதாகாரமாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய உடன்படிக்கையானது பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கிடைக்கப்பெற்ற பொன்னான சந்தர்ப்பம் என்ற போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதனை நிராகரித்தார் என தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை விடவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கான ஆதரவு வலுப்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் தெரதிவழித்துள்ளார்.
தமது அறிவிற்கு எட்டிய வகையில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படத் தயார் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Social Buttons