Latest News

January 20, 2015

ஹிருனிகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
by Unknown - 0

மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது தந்தை பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹிருனிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் தலைமையகம் மற்றும் ஹங்கொட பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஹிருனிகா இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் அது தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகள் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென ஹிருனிகா கோரிக்கை விடுத்துள்ளார். 
« PREV
NEXT »