இந்தியன் பிரிமியர் லீக் 2015 க்கான போட்டியின் ஹைதராபாத் சன்றைஸ் குழுவினரின் பயிற்சியாளர்களுக்கான பெயர் பட்டியலில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.
அத்துடன் இந்நேரம் இவர் இவ்வணிக்கு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவதற்காக சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் (42) சுமார் 66 ஐ.பி.எல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ், கொச்சி ரஸ்கேர்ஸ், கேரளா மற்றும் ரோயல் சலன்ஜேர்ஸ், பெங்களூர் அணி என 07 பருவ விளையாட்டுக்களில் பங்குபற்றியுள்ளார். பங்குபற்றி போட்டிகளில் 26.92 இனை சராசரியாக கொண்டு 63 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
சுப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 இலிருந்து 2010 வரையான காலப்பகுதியில் இவர் விளையாடிய போது 46 போட்டிகளில் பங்குபற்றி 52 விக்கெட்டுக்களைப் பெற்றுள்ளார். அத்துடன் சம்பியன் லீக் சுற்றின் இருபதுக்கு இருபது போட்டியிலும் இவர் பங்குபற்றியுள்ளார். அனைத்து விதமான மூன்று பந்து வீச்சு முறைகளிலும் இவர் சுமார் 1 347 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் முத்தையா முரளிதரன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற அவுஸ்ரேலியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பயிற்சி பயிற்சி ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons