தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று திடீர் நெஞ்சழுத்தம் காரணமாக மயங்கிவிழுந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சமயத்திலேயே திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மாவையின் பேச்சினாலேயே அனந்தி மயக்கமடைந்ததாக அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் அனந்தி உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தேர்தலிற்கு எதிரான கருத்தை வெளியிட்டனர்.
தேர்தலை பகிஸ்கரிக்க கோரி நாளை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்த அனந்தி, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்தது. மாவை அவரை இன்று காலையில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஏன் தேர்தலை நிராகரிக்க வேண்டுமென மாவை துருவிதுருவி கேட்டதால் அனந்தி தனது முடிவை மாற்றமல் , பின்னர் தேர்தலை பகிஸ்கரிப்போம், வேறு ஒன்றும் கேட்க வேண்டாமென கூறியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த மாவை அவரை கடுமையாக பேசியுள்ளார்.
இந்த சமயத்திலேயே அனந்தி மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அவரது குழந்தைகள் வீறிட்டு அலறியதையடுத்து. அயலவர்கள் விரைந்து வந்து அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது அனந்தி இயல்புநிலைக்கு திரும்பி விட்டார்.
No comments
Post a Comment