Latest News

January 01, 2015

வடக்கில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட மாட்டாது- மைத்திரி
by Unknown - 0

வடக்கில் இருக்கும் எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஆனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து பணியாற்றக் கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புத்தளத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன, மொழி மத பேதமின்றி புதிய அரசாங்கம் ஒன்றின் தேவை குறித்து மக்கள் பேசி வருகின்றனர். அதற்காக மக்கள் ஒன்றுப்பட்டுள்ளனர்.

பொது விடயங்கள் காரணமாக சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி மக்கள் அரசாங்கம் மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், கட்சிகள், முஸ்லிம்கள் கட்சிகள் மாத்திரமின்றி ஜாதிக ஹெல உறுமய கட்சியும் போன்ற தென் பகுதி கட்சிகளும் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்கி எமது அணியுடன் இணைந்துள்ளன.

நாட்டின் இன்றைய அரசாங்கத்தை போல் நாட்டின் வரலாற்றில் எந்த நாடும் பொது மக்களின் பணத்தை கொள்ளையிடவில்லை.

நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித்திட்டங்களில் 50 வீதம் கொள்ளையிடப்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் எந்தளவு பணத்தை அரசாங்கத்தில் இருப்பவர்கள் கொள்ளையிட்டு இருப்பார்கள் என்பதை உங்களால் கணக்கிட முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
« PREV
NEXT »