இலங்கைக்கு சுற்றுலா செல்லும், சென்றுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது.
இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றில் இருந்து விலகி இருக்குமாறு அதில் பிரித்தானிய பிரஜைகள் கோரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது தேர்தல் காலமாகையால், அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் பிரித்தானியா தமது நாட்டவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் உட்பட்ட சம்பவங்களையும் பிரித்தானிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
Social Buttons