நேற்று முன்தினம் (29.11.14) லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் இனப்படுகொலை தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும் என்கின்ற நூலின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர் திரு.கோபிரட்ணம், ஆய்வாளர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நூலின் சிறப்புப்பிரதியினை மூத்த ஊடகவியலாளர் திரு.இதயச்சந்திரன் பெற்றுக்கொள்ள தொடர்ந்து பலரும் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். நடனநிகழ்வுகளை சிறுமி ஆர்த்தி ரவீந்திரநாதன், பிருந்துவி திபாகரன் ஆகியோர் வழங்கினர். இறுதியாக ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் ஏற்புரையினையும், நன்றியுரையினையும் ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்கள் ஆற்றினார் மாலை 7.30 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது,
No comments
Post a Comment