Latest News

December 31, 2014

கூட்டமைப்பிலிருந்து நால்வர் மகிந்த பக்கம் பாயந்தனர்! பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஈபிடிபி வசமானது!
by admin - 0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன் வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களே இவ்வாறு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்படி, ததேகூ அதிகாரத்தில் இருந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஈபிடிபி வசமாகியுள்ளது 

இவர்களுக்கு வாக்குகள் வழங்கிய மக்கள் பெரும் எமாற்றம் அடைந்துள்ளார்கள் 
« PREV
NEXT »