எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்காக
விடுதலைப் புலிகளின்
பிராந்திய தலைவர்கள்
தேர்தல் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண பொறுப்பாளர்களான ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தற்போது கிழக்கு மாகாணத்தின் முக்கிய பிரதேசங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் மூலம் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலதிகமாக இராணுவத்தினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இவர்கள் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாக்களிப்பு தினத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் ராம், நகுலன் மற்றும் கருணா, பிள்ளையான் குழுவினரைக் கொண்டு கள்ள வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Social Buttons