Latest News

December 31, 2014

ரஊப் ஹகீம் இருக்கும் கட்சி தோற்கடிக்கப்படுவதே வழமை. அதுவே வரலாறு. இந்த தேர்தலிலும்கூட இதுவே நடை பெறப்போகின்றது.
by admin - 0

ஹகீம் அரசாங்கத்தில் இருந்து விலகும் வரை கடும் பயத்தோடு இருந்தேன், ஜனாதிபதி அவர்கள் இந்த தேர்தலில் தோற்று விடுவார்கள் என்று. ரஊப் ஹகீமின் இராஜினாமாவை தொடர்ந்து ஜனாதிபதியின் வெற்றி 100 வீதம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.
ரஊப் ஹகீம் இருக்கும் கட்சி தோற்கடிக்கப்படுவதே வழமை. அதுவே வரலாறு. இந்த தேர்தலிலும்கூட இதுவே நடை பெறப்போகின்றது.
இவ்வாறு 2014-12-30ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் ஜனாதிபதியை ஆதரித்து நடை பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா தனது உரையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலில் ஜனாதிபதி வெற்றி பெரும் வழிகள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. நாம் தேசிய காங்கிரஸ், எமது குதிரை அவருடன் இருக்கின்றது. அதை ஓட்டியாவது இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். நாங்கள் பல கூட்டங்களை நடாத்தி பல முடிவுகளை எடுத்திருக்கின்றோம், எதிலும் தோற்றுப்போக வில்லை.
ஹகீம் உங்களை பிழையான வழியின் பக்கம் இட்டுச்செல்கின்றார். கடந்த கி.மா. சபை தேர்தலில் ஹகீம் செய்த சூழ்ச்சியினால் மாகான சபை உறுப்பினரை இழந்து பரிதவிக்கின்றீர்கள். இந்த வரலாற்று வடுவினை நீங்கள் மறந்து விடக்கூடாது.
எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இப் பொத்துவில் மக்கள் தயாராக இருந்தாலும் அடுத்தவர்களின் பிழையான வழிநடத்தல்களால் வழிமறிக்கப்படுகின்றீர்கள். தேர்தல் காலங்களில் எங்களை புறக்கனித்து விடுகின்றீர்கள்.
தலைமை என்பது மக்களின் பிரச்சினைகளை ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்த்துக்கொள்வதற்கு முன்வர வேண்டும் அது தான் தலைமைத்துவத்திற்கான சானக்கியம். நீங்கள் பாருங்கள் இந்த தேர்தலிலும் கூட ஹகீம் அவர்கள் தபால் மூல வாக்களிக்கப்பட்ட பின்னர்தான் தனது தீர்மானத்தை அறிவித்திருக்கின்றார்.
இவரின் இவ் அறிவிப்பால் அவர் கட்சியின் உறுப்பினர்கள் கவலை அடைகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீ.மு. காங்கிரஸின் கி.மா.சபை உறுப்பினர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எப்படியாவது எங்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்று தாருங்கள் என்று கேட்டதோடு மாத்திரமல்லாது தலைமைத்துவத்தின் குறித்த முடிவை விமர்சனம் செய்தனர்.
ஜனாதிபதி வஞ்சகம் அற்ற ஒரு தலைவர். வஞ்சகம் உள்ளவராக இருந்திருந்தால் ஹகீமிக்கு நீதி அமைச்சினை கொடுத்திருக்க மாட்டார். அலுத்கமையில் பொது பல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்செயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக வீடுகளை கட்டி கொடுத்திருக்க மாட்டார். சென்ற தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை, எனவே முஸ்லிம் பிரதேசங்களுக்கு அபிவிருத்திக்கான பண ஒதுக்கீடு செய்திருக்க மாட்டார்.
இப்பொத்துவில் பிரதேசத்திற்கு என்ன அபிவருத்தி வேலைகளை செய்வதாக இருந்தாலும் அமைச்சர் உதுமான் வேண்டும் அல்லது நான் வேண்டும். தேர்தல் காலங்களில் எங்களை புறக்கனித்து விடுகின்றீர்கள். நீங்கள் புறக்கனித்தாலும் தொடர்ந்து உங்களிடத்தில் வருவோம், அபிவிருத்திகளை தருவோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஶ அவர்களுக்கு வாக்களிக்க வில்லை.
ஆனால் சுமார் 160000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அது எப்படி முடிந்தது. வெற்றி பெரும் வியூகங்களை அவர் தீர்மானித்து விட்டார். எமது குதிரையில் சென்றாவது வெற்றி பெருவார் என தெரிவித்தார்.


« PREV
NEXT »