எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர்களான பி.திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பிலேயே இருவரும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
எதிரணி கூட்டமைப்பில் இணைந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரமும் மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஷ்ணனும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment