இலங்கையில் முதல் தர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ரூபவாஹினியின் செனல் ஜ சேவையின் செய்தி வாசிப்பாளர் அறிவிப்பாளர் அபூஹனீபா முஹம்மத் றிஸ்மிக்கு இனந்தெரியாத கும்பலினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் கற்பிட்டி பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த 4 ஆம் திகதி தமது புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட ஆலங்குடாவில் அமைந்துள்ள விட்டில் இருந்த வேளை கெப் ரக வானகத்தில் வந்த இனம் தெரியாத கும்பலொன்று வீட்டிற்கு முன்னால் நின்று தமக்கு அச்சுறுத்தல்விடுத்து சென்றதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அபூஹனீபா றிஸ்மி அரச ஊடகமொன்றில் பணியாற்றுவதாலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கற்பிட்டி பொலீஸார் அன்றைய தினம் பாலாவி ஊடாக கற்பிடடி நோக்கி வந்த வாகனங்களின் விபரங்களை திரட்டிவருவதாக தெரியவருகின்றது.
No comments
Post a Comment