நீதி அமைச்சுப் பதவியை தான் இராஜினாமாச் செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத் இன்று இராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தற்பொழுது தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்குமாகாண சபை வரவு செலவுத் திட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவு அரசாங்கத்துக்கு வழங்கும் எனவும் கட்சித் தலைவர் ஹக்கீம் தற்பொழுது தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநாகர, உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொண்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன
No comments
Post a Comment