Latest News

December 28, 2014

விபத்தில் சிக்கியது மாயமான சிங்கப்பூர் விமானம்? பெலிங்டன் கடலில் விமான பாகங்கள் கிடப்பதாக தகவல்
by admin - 0

மாயமான சிங்கப்பூர் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெலிங்டன் தீவு அருகே மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து இன்று காலை 155 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் திடீரென நடுவானில் மாயமானது. அதன் தகவல் தொடர்பும் துண்டிக்கப் பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் சிங்கப்பூர் விமானப்படை, கடற்படையும் களமிறக்கப்பட்டது. 


இந்நிலையில், அந்த ஏர் ஏசியா விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் ஒன்றின் உடைந்த பாகங்கள் பெலிங்டங் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாவா கடலில் கண்டறியப்பட்ட விமான பாகங்கள் மாயமான ஏர் ஏசியா விமானத்துடையதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் மாயமான தகவலை ஏர் ஏசியா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரி முஸ்தபா, விமானம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன் வேறு பாதையில் செல்லப் போவதாக விமானி அறிவித்ததாகவும் ஏர் ஏசியா தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது கடத்தப்பட்ட என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. விமானம் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவலால் அதில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


« PREV
NEXT »

No comments