எதிர் வரும் ஜனவரி 8ம் திகதி நாம் மற்றுமோர் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம். இந்த நாட்டின் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் இந்த நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றார்கள். இந்த தேர்தல் ஏனைய தேர்தல்களைப் போல் அல்லாது எமது தாய் நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கப்போகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
“ஒரு சமூகம் அதனது தலைவிதியை தானே மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹ் அதனது தலைவிதியை மாற்ற மாட்டான்” என்பது இறை ஏற்பாடாகும். எனவே எமது தலைவிதியை மாற்றிக்கொள்ள அல்லாஹ் எமக்களித்திருக்கும் சந்தர்ப்பமே இதுவாகும். எனவே அதனை அடைந்து கொள்வதற்காக வேண்டி உழைப்பதும் பாடுபடுவதும் அவசியமாகும். மாற்றத்திற்க்கான எமது தெரிவு யாராக இருப்பினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே தனது ஆட்சி அதிகாரங்களை வழங்குகின்றான். எனவே நாம் விரும்பிய ஒருவருக்கு தேர்தலில் வாக்களித்துவிட்டு நின்று விடுவதன் மூலம் நாம் எதிர்பார்கின்ற மாற்றம் நிகழ்ந்து விடாது. மாறாக இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் மாற்றமொன்றை பெற்றுத்தரும் படி இறைவனிடம் இரு கரமேந்தி அழுது தொழுது மன்றாடி பிரார்த்தனையும் புரிவதும் அவசியமாகும்.
எனவே நாம் இந்த அடிப்படையில் நாம் எதிர்பார்த்திருக்கும் அந்த மாற்றத்திற்காக வேண்டி அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிராரத்தனை புரிவதும் தேர்தல் தினத்தன்று இரவை கியாமுல்லைல்/தஹஜ்ஜுத் போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு துஆ பிரார்த்தனைகள் புரிவதும் அவசியமாகும். அத்தோடு முடியுமானவர்கள் அடுத்த நாள் நோன்பு நோற்றவர்களாக வாக்களிக்கசெல்லும் படியும் உங்கள் அனைவரையும் மிகவும் அன்பாகவும் வினயமாகவும் வேண்டிக்கொள்கின்றறோம்.
இப்படிக்கு,
Transnational Government of Srilankan Muslims
Social Buttons