Latest News

December 30, 2014

ஜனாதிபதிக்கு மைத்திரி கைலாகு செய்யாதது ஏன் ? சிறிலங்காவில் தேர்தல் படுத்தும் பாடு -திடுக்கிடும் உண்மை….
by admin - 0

இந்த அரசாங்கம் என்னையும், எதிர் கட்சியில் இணைந்துல்ல சக முஸ்லிம்களையும் தீவிர வாதிகள், மத வாதிகள் என்று மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரத்தினை மேற்கொள்கின்றது. எதிர் கட்சியில் இருக்கும் முஸ்லிம்கள் தீவிர வாதிகளா ?  அல்ல அரசாங்கத்தோடு இருக்கும் கேபி, பிள்ளையான், கருணா  போன்றவர்கள் தீவிர வாதிகளா ?. இவர்களில் யார் தீவிர வாதிகள் என்பதை இந்த இலஙகை மக்களும், உலக மக்களும் நன்கு அறிந்தவர்கள்.

இவ்வாறு 28.12.2014ம் திகதி பொத்துவிலில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய மாகன சபை உறுப்பினர் அசாத் சாலி தனது உரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து மிகவும் காட்டமாக பேசிய அவர், ஜனாதிபதி மஹிந்த றாஜபக்ஶா மிகப்பெரிய சூனியக்காரர், மந்திர வாதிகளின், சோதிடர்களின் கருத்துகளை மிகவும் நம்புபவர். கடந்த டிசம்பர் எட்டாம் திகதி தேர்தலுக்கான மனு தாக்கல் செய்ய போகும் முன்னர் மந்திரித்த என்ணையினை பேனையில் பூசிக்கொன்டும், தன் இரு கைகளில் அப்பிக்கொண்டும் சென்றிறுந்தார். தேர்தல் ஆனையாலரிடம் இருந்த பேனையினால் கை ஒப்பம் இடமால் தான் என்ணை பூசிக்கொண்டு வந்த பேனையினாலேயே கை ஒப்பமிட்டார்.

இந்த விடயத்தினை அவரது காரியாலயத்தில் இருந்த ஒருவர் உடனடியாக என்னோடு தொடர்பு கொண்டு பின்வருமாறு கூரினார்;  ”அசாத் சாலி  நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் ? , தேர்தல் திணைக்களத்தில் இருந்தால் தயவு செய்து நான் சொல்லும் செய்தியினை மைத்திரி இடம் மிக அவசரமாக எத்தி வையுங்கள். ஜனாதிபதி அவர்கள் வேட்புமனு தாக்கள் செய்த பின்னர் மைத்திரியோடு கை கொடுப்பதற்கு முற்படுவார். நீங்கள் மைத்திரியினை அவருக்கு கை கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். காரணம் ஜனாதிபதி தன் இரு கைகளிலும் மந்திரித்த என்ணையினை பூசி கொண்டு வந்திறுக்கின்றார் ” என்றார்.

இதன் காரணத்தினால் தான் மைத்திரி ஜனாதிபதிக்கை கைலாகு செய்யாமல்  கை கூப்பி வணங்கினார். கைலாகு செய்திருந்தால் எமது 9ம் திகதிய ஜனாதிபதி மைதிரி அவர்கள் இன்று இந்த பிரச்சார கூட்டத்திற்கு வருகை தராமல் மஹிந்தவின் கூட்டத்தில் உட்காந்திருப்பார் என நகைச்சுவையாக பேசினார்.
« PREV
NEXT »