Latest News

December 25, 2014

மகிந்தவின் வெற்றிக்காக உழைக்கும் யாழ் துணைவேந்தர் !
by Unknown - 0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்களை கட்டாயப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்கும் குறித்த வாழ்த்துக் கடிதத்தில் கையொப்பம் இடுமாறு துணைவேந்தரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச உத்தியோகத்தவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவது தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவே யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முதலாவது முறைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது .


« PREV
NEXT »