யாரை பாராட்டுவது! விழிகளுக்குள் வலிகளை சுமக்கும் பிஞ்சுகளுக்கும், நெஞ்சுக்குள் நஞ்சினை சுமக்கும் மருமக்களுக்கும், வாய் பேசும் உமைகளாக வாழும் பெற்றவர்களுக்கும், நவரச நாயகனின் அமைதியான குமுறல், அடக்கமான பாடகரின் பார்வையாலே செய்யும் நர்த்தனம், பாவிமகளே! எனத் திட்டி தீர்க்க வைக்க மருமகளாக வரும் யதார்த்த நடிப்பரசி!
நீங்கள் செய்வது நடிப்பு, அது இயல்பானது அல்ல, என்னைப் போல் பாத்திரத்தோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி தன் நடிப்பில் முத்திரை பதிக்கும் செல்வ மகள்.
அனைத்தையும் அமைதியாக இருந்தே எம்மை எல்லாம் அழவைக்கும் இயக்குனர் "தீபனுக்கு" கட்டிப்பிடித்து என் அன்பான முத்தங்கள்... மொத்தத்தத்தில் "சுபர்த்தனா மூவீஸின்" உழைப்பாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... இன்னும் வேண்டும் இது போல்...!
Social Buttons