Latest News

December 24, 2014

நடிகர் விஜய் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு-மீண்டும் ஒரு சர்ச்சை வழக்கு
by Unknown - 0

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கத்தி மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், இப்படம் என்னுடைய கதை என்று மீஞ்சூர் கோபி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி ஆனது.

தற்போது தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்இதில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம், நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையாகும். எனவே கத்தி திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

தொலைக்காட்சியில் கத்தி திரைப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். கதையை திருடியதற்காக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்இதை தொடர்ந்து மனுவை விசாரணை செய்த நீதிபதி இயக்குனர் .ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்வில்லியம் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

« PREV
NEXT »