Latest News

December 11, 2014

இலங்கையிலும் களமிறங்கியது கூகுள். வெகுவிரைவில் இலங்கையிலும் Google Street View தொழில்நுட்ப வசதி.
by admin - 0

தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சிகள் புரிந்து வரும் கூகுள் நிறுவனம் . புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி உலகின் பார்வையை தன்மீது திருப்பி வருவது அறிந்ததே..

உலகின் 63 நாடுகளில் உள்ள வீதிகளை அசல் புகைப்பட வடிவில் பார்க்கும் வகையில் கூகுள் நிறுவனம் Google Street View தொழில் நுட்பத்தை சிலவருடங்களுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி நடைபோட்டு வரும் கூகுள் நிறுவனம் தற்போது அந்த சேவையை இலங்கையிலும் அறிமுகப்படுத்த களமிறங்கியுள்ளது.

அதற்காக விசேடமாக தயாரிக்கபட்ட கார்களை இலங்கைக்கு கொண்டுவந்துள்ள கூகுள் நிறுவனம் நாளை (12) முதல் கொழும்பில் இருந்து தன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளது.

விசேட கேமராவை கொண்ட இக்கார் இலங்கை வீதிகளில் சென்று புகைப்படங்களை எடுப்பதுடன் குறுகிய காலத்தில் அவற்றை இணையத்தில் இணைக்கவும் உள்ளது.

அதன்பின்னர் maps.google.lk இணையத்தில் இலங்கையின் Google Street View களை பார்க்கலாம்.


« PREV
NEXT »

No comments