எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்கம் கள்ள வாக்குகளை பெருமளவில் பயன்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் கள்ள வாக்குச்சீட்டுக்களை சீனன்குடாவில் உள்ள கடற்படை முகாமில் உள்ள லேத் இயந்திரம் மூலம் அச்சிட்டு அவை அங்கிருந்து வெலிசறை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த தகவலை கடற்படையினர் தமக்கு தெரிவித்துள்ளதாக ராஜித சேனாரத்ன கொழும்பில் வைத்து குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பான முறைப்பாட்டை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை 17வது அரசியல் அமைப்பு இ;ல்லாமல், பெயருக்கு மாத்திரமே தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் உள்ள நிலையில் தேர்தலின் போது நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
விவசாயின் முகநூலில் செவ்வாய் அன்று பகிரப்பட்ட செய்தி
No comments
Post a Comment