polls & surveys
இந்த நடவடிக்கை நடைபெற்ற காட்டு பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் முன்னமே சிலபோர் குற்றத்தில் வெளிப்பட்ட அதாவது சேனல் 4 முகம் காட்டப்பட்ட இராணுவம் மற்றும் சில முன்னாள் போராளிகள் ,தமிழர்களை தாங்களே கொன்று எரியூட்டி விட்டு இப்போது புலிகளை குற்றவாளிகள் ஆக்குவதற்கு முயட்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த காட்டுபகுதிகளில் 2 வருடங்களுக்கு முன்னர் சிங்கள நிபுணர்கள் மற்றும் இராணுவ பிரச்சன்னம் இந்த நோக்கத்தில் நடைபெற்றது என்பது தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் உட்பட 80 பேர் எரிக்கப்பட்ட இடம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து 2ம் நாளான இன்றும் நடைபெற்றுள்ளது.
மேற்படி ஆய்வுகள் நேற்றைய தினம் 9 அமைப்புக்கள் இணைப்பில் தொடக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 2ம் பகுதி ஆய்வுகள் நெடுங்கேணியின் எல்லைப் பகுதியில் உள்ள வனத்தில் நடைபெற்றுள்ளது.
2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் அத்தியட்சகர் பதவி வகித்த ஜயரட்னம் மற்றும் படையினரின் ஓமந்தை சோதனைச் சாவடியில் கப்ட ன் தரத்தில் பதவி வகித்த லகி என்பவரும் விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் உள்ள புலிகளின் அல்பா 2 மற்றும் அல்பா 5 ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அதே ஆண்டில் மேற்படி இரு அதிகாரிகளுடன் சேர்த்து 80 பேர் முதலாவதாக 30பேர் பேருந்து மற்றும் லொறி ஆகியவற்றில் கொண்டு செல்லப்பட்டு பெரிய இந்து மடு காட்டுப் பகுதியில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸ் அதிகாரி ஜயரட்னம் வள்ளிபுனம் ஈஸ்டர் வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அதே ஆண்டில் மேற்படி இரு அதிகாரிகளுடன் சேர்த்து 80 பேர் முதலாவதாக 30பேர் பேருந்து மற்றும் லொறி ஆகியவற்றில் கொண்டு செல்லப்பட்டு பெரிய இந்து மடு காட்டுப் பகுதியில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸ் அதிகாரி ஜயரட்னம் வள்ளிபுனம் ஈஸ்டர் வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் மீதமானவர்கள் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் வைத்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் இலங்கையின் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் சாட்சியம் வழங்கியதன் அடிப்படையில் கிளிநொச்சி நீதிமன்றின் பணிப்பிற்கமைய மேற்படி ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் பெரிய இந்த மடு காட்டுப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதன்பின்னர் இன்றைய தினம் 2ம் இடமான நெடுங்கேணியின் எல்லைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆய்வுகள் காலை தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து நாளைய தினம் வள்ளிபுனம் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.
மேற்படி ஆய்வுகளுக்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய முன்னாள் போராளி ஒருவர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Social Buttons