நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
டிசம்பர் 8ம் திகதி எதிர்க்கட்சி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார். அதற்கு ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கமாட்டார். ஏனென்றால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளரார். 2010ம் ஆண்டுக்கு முன்னர் ஜனநாயக அரசாங்கம் அமைப்பது குறித்து பேசப்படவில்லை. மக்களின் உயிர்களையும் நாட்டையும் பாதுகாப்பது குறித்தே பேசப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக கொண்டு வருவதற்கே மாதுலுவாவே சோபித தேரர் முயன்றார். ஒரு வெளிநாட்டு தூதரகம் பொது வேட்பாளராக சந்திரிகா குமாரதுங்கவின் பெயரை சிபார்சு செய்தது. அதற்கு அவர் விரும்பினாலும் குடும்பத்தார் எதிர்த்ததால் அவர் பின் வாங்கினார்.
நூறு நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 64 பேருடன் வருவதாக சந்திரிகா குமாரதுங்க கூறியதாலேயே ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு இணக்கம் தெரிவித்தார்.ஆனால் அவர் தற்பொழுது ஏமாந்து விட்டார். அந்தக் கவலையிலேயே அவர் இருக்கிறார்.
பட்டப்பகலிலே முழு ஐ.தே.க.வையும் சந்திரிகா குமாரதுங்க ஏமாற்றியுள்ளார். அதனாலே 24 மணி நேரத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க கூறுகின்றார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஐ.தே.க.வில் யாரும் இல்லையா?
20 வருடங்கள் காத்திருந்த ஐ.தே.க.வுக்கு சந்திரிகா பிரேரித்த நபரை ஏற்க நேரிட்டுள்ளது. ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டு மென்றால் அதனை செய்வோம். நல்லாட்சி ஏற்படுத்த வேண்டுமென்றால் அதனையும் செய்வோம். ஆனால், ஐ.தே.க.வை விற்று சொர்க்கம் செல்ல முயல்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதை விட இந்த பொதுவேட்பாளரை தோற்கடிப்பது இலகுவானது. டிசம்பர் 8ம் திகதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்போவது மைத்திரிபால சிறிசேனவா? ரணில்விக்கிரமசிங்கவா? என பார்ப்போம் எனவும் அமைச்சர் சவால் விடுத்தார்.

No comments
Post a Comment