மேற்கு பிரான்சில் உள்ள பிரித்தானி (டீசவைவயலெ) பகுதியில் நேற்று மெட்ரோ தொடரூந்து சேவைக்கான பள்ளம் தோண்டியபோது அங்கு 250 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளனர்.
அங்கு உயிரிழப்பு எதுவும் நிகழாமல் இருந்த போதிலும், இந்த சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment