Latest News

November 24, 2014

சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களுக்கு சிறிய துண்டை ஒட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள் !
by admin - 0

நேற்று இரவு(ஞாயிறு) அன்று யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள், சிறிய துண்டுகளை ஒட்டியுள்ளார்கள். சுடுவோம் என்றும் , பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினத்தை கொண்டாட முடியாது என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இந்த சிறிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.
"இவர்கள் புலிகளை உருவாக்குகிறார்கள்" , "இவர்களைச் சுடுவோம்", "மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்" என்று கொச்சைத் தமிழில் எழுதப்பட்டு 4 மாணவர்களது பெயர்களும் குறிப்பிடப்பட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நிவாஸ், தமிழ்ச்செல்வன், ஐங்கரன், பிரிட்டோ ஆகியோரின் பெயர்களே குறிப்பிடப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது 
« PREV
NEXT »