Latest News

November 24, 2014

மகிந்தவை தோற்றாலும் தண்டிக்க புதிய அரசு விடாது -சிங்களம் தமிழர் விடயத்தில் ஒற்றுமை தமிழன் எப்போ ஒன்றாவான்
by admin - 0

இலங்கையில் ஆட்சி மாற்றம வந்ததும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், இலங்கை இராணுவத்தையும் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கலாம் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் காணும் கனவு ஒருபோதும் பலிக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மகிந்தவை தோற்றாலும் தண்டிக்க புதிய அரசு விடாது சிங்களம் தமிழர் விடயத்தில் ஒற்றுமை தமிழன் எப்போ ஒன்றாவான் 

இலங்கை நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் இவ்வாறு கூறியுள்ளார்.
மைத்ரிபால சிறிசேன தலைமையில் எதிரணி எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியானது என தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த வெற்றிக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையோ, இராணுவத்தையோ போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கலாம் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது என்றும் சூளுரைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், அதனுடன் இணைந்திருக்கும் எதிர் கட்சிகளும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய அவர் எனினும் இந்த ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ள புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும், சில சர்வதேச சக்திகளும் முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றும்இ அது வெறும் கனவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, நாட்டு மக்களையோ, நாட்டையோ ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சி காட்டிக் கொடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியும், ஏனைய எதிர் கட்சிகளும் நாட்டையும், தற்போதைய ஜனாதிபதியையும் காட்டிக்கொடுக்க சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், போர் குற்றச்சாட்டு சுமத்தி சர்வதேச நீதிமன்றில் தண்டனை பெற்றுக்கொடுக்க முனைவதாக கூறும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »