அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய நிறுத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சிங்கள மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ள சோபித்த தேரரும், இதற்கு உடன்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அவரை போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தியதற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரணிலே போட்டியிடுவார் என மனக்கணக்கு போட்ட மகிந்த தான் இலகுவாக வென்று விடலாம் என தப்பு கணக்கு போட்டார் . இதனால் மகிந்த கலக்கம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் முன் ஏற்பாடாக காவல்துறையின் அதிபரை மாற்றி தனது வெற்றியை நிறுவ பெரும் திட்டம் தீட்டியுள்ளார்.
Social Buttons