Latest News

November 19, 2014

இராணுவ தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரை காணவில்லை
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவிருந்தஇராணுவ தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.காவல்துறை இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது .

மவுண்கார்மேல் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்ரன்ஜெயரோன் (வயது 31) என்பவரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல் போயுள்ளார்.

கடற்றொழில் செய்யும் இவர் நேற்று திங்கட்கிழமை காலை கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார். இதுவரையில் வீடு திரும்பவில்லை என  செவ்வாய்க்கிழமை மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
« PREV
NEXT »