நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் தர்மபுரத்தைச் சேர்ந்த வி. ஜதார்த்தன் (வயது - 24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார் என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments
Post a Comment