Latest News

October 19, 2014

மஹாராஷ்ட்ரா, ஹரியானாவில் பாஜக வெற்றிமுகம்
by admin - 0

இந்தியாவில் நடந்து முடிந்த மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட புள்ளிவிவரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து வெளியாகிவருகின்றன. அவை இரு மாநிலங்களிலுமே மத்தியில் ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை காட்டுகின்றன.
மஹாராஷ்ட்ராவின் மொத்தமுள்ள 288 இடங்களில் 287 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. அதன்படி பாஜக 115 இடங்களிலும், சிவசேனா 51 இடங்களிலும், காங்கிரஸ் 49 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 49 இடங்களிலும், மற்ற கட்சிகள் 26 இடங்களிலும் வெற்றி அல்லது முன்னணியில் உள்ளன.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கான முன்னணி நிலவரங்களும் வெளியாகத்துவங்கியுள்ளன. அதன்படி பாஜக 49 இடங்களிலும், இந்தியதேசிய லோக்தள் 21 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
இந்த போக்கு இப்படியே நீடித்து இறுதி முடிவுகளாகவும் மாறும்பட்சத்தில் ஹரியானாவில் பாஜக தனியாகவே ஆட்சியமைக்கும். மஹாராஷ்ட்ராவில் சிவசேனை அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »