Latest News

October 18, 2014

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை
by admin - 0

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 


இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ். ஏழாலைப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் வீட்டுக்குச் சென்ற சீருடை அணிந்த இராணுவத்தினர் மாகாணசபை உறுப்பினரிடம் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வசாவிளான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பண்டார எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அதிகாரியே விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டுக்கு வந்த பண்டார தலைமையிலான 03 சீருடை அணிந்த இராணுவத்தினர் அவரது தந்தையிடம், உங்கள் மகன் எங்கே, அவரை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உறுப்பினரை விசாரணை செய்த அவர்கள் உங்களுக்கு திருமணமாகி விட்டதா? மனைவி யார்? குழந்தைகள் உள்ளனரா? எத்தனை பேர்? என தேவையற்ற பல வினாக்களை எழுப்பி விசாரித்தனர்.

இவ்வாறு தன்னைப் பற்றியும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் தனது அரசியல் நடவடிக்கைகள் பற்றியுமே கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள சமூக சூழ்நிலையில் தன்னைப் பற்றி இராணுவத்தினர் சகல தகவல்களையும் அறிந்துள்ள போதிலும் விசாரணைக்கான காரணத்தைக் கோரிய போது தாம் மேலிட உத்தரவின் பிரகாரமே விசாரணைகளில் ஈடுபடுவதாக குறித்த அதிகாரி தெரிவித்ததாக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

அண்மைக் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அதன் உறுப்பினர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்யும் ஒரு சம்பவங்களின் ஒரு பகுதியாகவே இவ்விசாரணை நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »