வன்னியில் தமிழ் கிராமங்களை கிராமங்களை சிங்கள கிராமங்களாக மாற்றும் நடவடிக்கைகளை சிறிலங்கவின் இராணுவத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் இதற்கான வேலைத்திட்டங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை அண்மையில் இராணுவ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த காணிகள் பல தற்போது சிங்களவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி வவுனியா வடக்கில் இருந்த இருந்த கொக்கச்சான்குளம் நந்தமித்திரகம என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எல்லாள மன்னருக்கு எதிராக போரில் வெற்றி பெறுவதற்கு சிங்கள மன்னரான துட்டுகைமுனுவுக்கு உதவிய 10 தளபதிகளில் நந்தமித்திரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயி முன்னர் வெளியிட்ட செய்தி
Social Buttons