விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வரிகளை நெஞ்சத்தில் நிறுத்தி வீணான வாந்திகளை நம்பாமல் விடுதலைக்கான பயணத்தை உலகத் தமிழர்கள் முழுவீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என ஈழதேசம் இணையம் சத்தியத்தின் வழி நின்று வேண்டிக்கொள்கின்றது.
இன்று இதுவரை உலகத் தமிழர்களால் அறியப்பட்டிராத ஒரு இணையத்தளம் பரபரப்பிற்காக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. செய்தியை வெளியிட்ட இணையம் எப்படிப்பட்டது…? செய்தியில் சொல்லப்பட்டுள்ள விடையம் என்ன…? அதன் உண்மைத்தன்மை எப்படி…? இப்படி எதையும் சீர்தூக்கிப் பார்க்காது உடனடியாக பத்துபேரிடம் தகவலைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள உண்மைக்கு மாறான செய்தியே உலகத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியு;ளது. இது குறித்து நாம் அறிந்த போது…
இந்த செய்தி இந்தியாவில்தான் முதன் முதலில் பரப்பப்பட்டு வருகின்றது. அதுவும் தமிழ் நாட்டில் அல்ல மும்பை உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்தே தமிழகத்தில் உள்ளவர்களிற்கு இந்த தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதையறிந்த தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் சிலர் அந்த செய்தி என்னவென்றே ஆராய்வதற்கு முன்னர் தொடர்பில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பரபரப்புடன் தொடர்புகொண்டு விடையத்தை கூறியுள்ளார்கள்.
இவ்வாறான அழைப்பு ஒன்று எமக்கும் வந்தது. நாம் செய்தியை பார்ப்பதற்கு முன்னரே அவரிடம் இது தவறான தகவல் நீங்கள் ஒன்றும் குழம்ப வேண்டாம் எனக் கூறியபோது இல்லை இது முக்கியமான இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.. உறுதிப்படுத்தி சொல்லவும் என மீண்டும் பரபரப்பானார். சரி அவரின் திருப்திக்காக என்னதான் வந்துள்ளது என பார்த்தோம்.
தங்கமலை இரகசியம் போல் இந்த வதந்தியை தாங்கிய இணையத்திற்கு இன்நொரு இணையம் அறிமுக இணைப்பு கொடுக்கின்றது. பொட்டு அம்மான் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதைவிட இந்த இணையத்தை கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது.
அங்கே போனால் கொங்கொங்கில் மறைந்திருந்த பொட்டு அம்மான் கனடாவில் இருக்கும் தனது மனைவி பிள்ளையை பார்க்க சென்றபோது விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சிறிலங்காவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் போகிற போக்கில் செய்தி வெளியிட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற அடிப்படையில் வெளியாகிய இந்த செய்திதான் தற்சமயம் உலகத் தமிழர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
எப்போதெல்லாம் விடுதலைக்கான பயணத்தில் உலகத் தமிழர்கள் வீச்சுடன் புறப்படத் தயாராகின்றார்களோ அப்போதெல்லாம் சிறிலங்கா இந்திய உளவுத்துறையினரால் இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவது வழக்கம்.
இதுவரை தேசியத் தலைவரது இருப்பை மறுத்து செய்திகளை வெளியிட்டு உலகத் தமிழர்களது ஆன்மாவை உலுக்கியெடுக்க முயற்சித்தவர்கள் இம்முறை மாறுதலுக்காகவோ என்னவோ பொட்டு அம்மானை கையிலெடுத்துள்ளார்கள்.
இந்த வாந்திகளுக்கு செவிசாய்க்காமல் எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகேட்கும் போராட்டத்தில் உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் போராடுமாறு சத்தியத்தின் வழி நின்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
“ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப யேண்டும்.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஈழதேசம் இணையம்.
No comments
Post a Comment