கொழும்பில் தமிழ் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பொலிஸார் சென்று, அங்கு குடியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்த நிலைமை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, பகுதிகளில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இவ்வாறான விண்ணப் படிவங்கள் கொடுக்கப்பட்டு இவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளரின் பெயர், வசிப்பவர்களின் பெயர் மற்றும் குடியிருப்பாளர்களின் விபரங்கள் அனைத்தும் அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்காத மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கையளிக்க தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் கூறியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
Social Buttons