இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
உயர்ஸ்தானிகர் ரன்கின், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது அங்கு வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வன்னியில் இராணுவ பிரசன்னம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ரன்கின் தமிழ் குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ரன்கீனுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிவமோகன், ரவிகரன் ஆகியோரும் இந்த இரகசிய சந்திப்புக்களில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டன் உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு அமைய இராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார் என திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Buttons