வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் ஆனால் மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்துள்ளதால் வடக்கு மாகாண சபை சீராக இயங்கவில்லை என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று காலை 9.15 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் அன்ரூ மானுடன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பலவித முட்டுக்கட்டைகளை விதித்து வருவதாகவும் ஆயர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Social Buttons