அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
போலியான கடவுச்சீட்டுக்கள் ஊடாக பயணித்தமை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன் (வயது 20), செபஸ்தியன் பிள்ளை ரொபட் (வயது 43) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் செபஸ்தியன் பிள்ளை ரொபட் என்பவர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி பிணை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1. பெயர்: செபஸ்டியான் பிள்ளை ரொபட்
2. வேறு பெயர்: புலிகளின் பெயர்: டயஸ்
3. முகவரி: கட்கலந்தகுளம், முருங்கன், மன்னார்.
4. தற்காலிக முகவரி: இளவாலை, கிழக்கு, இளவாலை, யாழ்ப்பாணம்.
5. தேசிய அடையாள அட்டை இல: 721514253 V
6. கடவுச்சீட்டு இலக்கம்: N 5086823
7. பிறந்த திகதி: 1972.05.30
8. வயது: 43
1. பெயர்: பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன்
2. வேறு பெயர்: இல்லை
3. முகவரி: இல.266, வல்லுவர்புரம், விஸ்வமடு, முல்லைத்தீவு
4. தற்காலிக முகவரி: இல்லை
5. தேசிய அடையாள அட்டை இல: 942802609 V
6. கடவுச்சீட்டு இலக்கம்: N 3598826
7. பிறந்த திகதி: 1994.10.06
8. வயது: 20
Social Buttons