Latest News

September 09, 2014

தமிழகத்தில் இலங்கைப் பெண் தீக்குளித்து மரணம்- அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்
by Unknown - 0

தமிழகத்தில் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை, வந்தவாசி அருகில் உள்ள ஓசூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான பரமேஸ்வரி என்ற இந்தப்பெண் மூன்று வருடங்களுக்கு முன்னர் கீழ்புத்துபத்து அகதி முகாமில் உள்ள ஒருவரை திருமணம் புரிந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இடுப்பு பலியால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி வலி அதிகமாக வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீவைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கடும் தீக்காயங்களுக்குள்ளான குறித்த பெண், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தம்பி கேதீஸ்வரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கீழ்க்கொடுங்காலூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்
திருவண்ணாமலையின் விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது குடும்பங்களுடன் மீளிணைக்க வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் எங்கிருக்கிறார்கள் என்ற விடயம் தெரியாமலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தப்போராட்டத்தில் 24 பேர் இணைந்துள்ளனர்.
தாம் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »