Latest News

August 19, 2014

ஆஸ்திரேலிய தஞ்சக் கோரிக்கை கொள்கையில் சிறு மாற்றம்!!
by Unknown - 0

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியதை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 150 சிறார்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பத்து வயதுக்கும் குறைவான சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தற்காலிக வதிவிட அனுமதிகள் வழங்கப்படும் என, குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் அமைப்புகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எனினும் ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய கொள்கையானது, பத்து வயதுக்கும் மேற்பட்டு, ஆஸ்திரேலிய நிலப்பரப்போ அல்லது பாப்வா நியூகினி மற்றும் நவ்ரூவிலுள்ள தடுப்பு முகாம்களிலோ உள்ளவர்களுக்குப் பொருந்தாது.
கடந்த சில ஆண்டுகளாக, அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், படகில் வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததை அடுத்து, தஞ்சம் கோரிகள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா மேலும் கடுமையாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
« PREV
NEXT »