பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை படையினர் திட்டமிட்டு தனது பிடியை அதிகரித்து வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் காய்கறி பயிரிடுவது முதல் கொழும்பு நகர அழகுபடுத்துதல் உட்பட பல செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மேற்பார்வை மற்றும் அறிவுரையின்படி சுற்றுலாத்துறையின் ஹொட்டல் வர்த்தகத்தில் விமானப்படையினரின் பங்கு அதிகரித்துள்ளது.
முப்படைகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை குறைந்த ஊதியத்தில் ஊழியர்களாக பயன்படுத்தி இந்த சுற்றுலா ஹொட்டல்களின் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அது தனியார் துறையினருக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
திருகோணமலை, சீனன்குடா, திருகோணமலை துறைமுகம், அனுராதபுரம், அத்திட்டிய, கட்டுநாயக்க போன்ற இடங்களில் விமானப்படையினர் சுற்றுலா ஹொட்டல் மற்றும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் விமானப்படையினருக்கான செல்லப்பிராணிகள் சேவை நிலையத்தையும் விமானப்படையினர் நடத்தி வருகின்றனர்.
விமானப்படையினரை தவிர இராணுவத்தினரும் சுற்றுலா ஹொட்டல்களை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா ஹொட்டல் மற்றும் விடுதிகளை தவிர, விமானப்படையினர் கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் உள்ளூர் வர்த்தகத்தில் படையினர் ஈடுபட்டு வருவதால், அதே துறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Social Buttons