தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிகமாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
அந்தக் கட்டுரைக்கு சில தமிழக அரசியல் கட்சிகளும், திரைப்பட துறையினரும் பல வகையில் போராட்டமும், கண்டனமும் தெரிவித்து வந்தனர். அந்த அவதூறு கட்டுரை தொடர்பாக இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன். கட்டுரை தொடர்பாக அறிக்கை கோரியிருக்கிறேன் என்று கூறினார்.மேலும், தமிழக அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும், திரையுலகினர் போராட்டத்தின் எதிரொலியாக இணையதளத்தில் இருந்து அக்கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.
Social Buttons