Latest News

August 05, 2014

சாட்சி வழங்குங்கள் நீதி வரும் என எதிர்பார்போம்
by admin - 0

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சி வழங்குகின்றவர்களை, கைது செய்யவோ, தண்டிக்கவோ, துன்புறுத்தவோ அல்லது புறந்தள்ளவோ கூடாது என்று இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச நிபுணர்கள் குழு தமது விசாரணைகள் தொடர்பான தகவல்களை புதுப்பித்துள்ளது. 

இவ்வாறு புதுப்பிக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணையத்தளதில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குழு இலங்கையில் சென்று விசாரணைகளை செய்வதற்கான கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைப்பதாகவும், அது குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இறுதியாக இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில், மின்னஞ்சல்களின் ஊடாகவும் யுத்தக் குற்றங்கள் குறித்த சாட்சிகளை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி oisl_submissions@ohchr.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விசாரணைக்கான தகவல்களை நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: oisl_submissions@ohchr.org

முழுமையான விபரங்கள் ஆங்கில இணைப்பில்:
http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

« PREV
NEXT »

No comments