இலங்கையில் தமிழ், முஸ்லி்ம் கிராமங்கள் இருக்கக் கூடாது என்பதாக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றின்போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
வாக்கு வங்கியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனி தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இருப்பதை கண்டு கொள்வதில்லை, ஆனால் இனி வரும் காலங்களில் அவற்றை மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் சிங்கள மக்கள் கலந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும், அதற்கேதுவாக எதிர்காலத்தில் தமிழ், சிங்கள கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட் வேண்டும், இந்த செயற்திட்டத்தை பௌத்த பிக்குகளின் ஆசியுடன் பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டும்.
சட்டரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பான வழியிலோ அனைத்துப் பிரதேசங்களிலும் சிங்கள மக்கள் பரந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும், இதற்காக மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படும், அவர்கள் எதிர்த்தாலும் இந்தச் செயற்திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் வகையிலான பயிற்சி மற்றும் செயலமர்வுகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவும் பொதுபல சேனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Social Buttons