பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தங்காலை பிரதே சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரண உள்ளிட்ட நான்கு பேருக்கு உயர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது.
எனினும், இந்த தீர்ப்புக்கு எதிராக குறித்த குற்றவாளிகள் கொழும்பு உயர் நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளனர்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் சார்பில் அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
வழக்கு விசாரணைகளின் போது சாட்சியங்களின் மூலம் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் நீதவான் தண்டித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின் போது சட்ட மற்றும் சம்பவங்களின் பின்னணி ஆராயப்படவில்லை.
குற்றவாளிகள் எனத் தெரிவித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்ய வேண்டுமென மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் மேன்முறையீடுகளுக்கு வழக்கு தீர்ப்பு தொடர்பான ஆவணங்களும் இணைக்கப்பட்டு நீதிமன்றில் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டனை விதிக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட நால்வரும் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Social Buttons