Latest News

July 14, 2014

வில்லியம் வாலஸ்- தேசிய தலைவர் ! ஸ்காட்லான் மண்ணில் 23 நடக்கப்போவது என்ன ?
by admin - 0


பல விடுதலைப் போராட்ட வரலாறுகளை நாம் கேட்டதும் உண்டு அறிந்ததும் உண்டு. உண்மையில் நாம் ஈழத் தமிழர்களாக இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது தெரியுமா ? இந்த 21ம் நூற்றாண்டில் நாம் எமது விடுதலைக்காக போராட்டிக்கொண்டு இருப்பது தான். வரும் 23ம் திகதி கிளாஸ்கோ நகரில் மாபெரும் போராட்டம் ஒன்றை லண்டன் தமிழர்கள் அறிவித்துள்ளார்கள். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தான் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது. அங்கே தமிழர்கள் செல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று சிலர் நினைக்க கூடும். "வில்லியம் வாலஸ்" என்றால் யார் ? அவரையும் அவரோடு விடுதலைக்காக போராடியவர்களையும், சமாதானம் பேச என்று அழைத்து கிளாஸ்கோ நகரில் ஆங்கில அரசு எவ்வாறு கைதுசெய்தது ? வில்லியம் வாலஸ் ஸ்காட்லாந்தின் பாதுகாவலர் என்று பெயர் பெற்றவர். எமது தேச விடுதலைக்கு போராடி தேசிய தலைவர் என்று அனைவராலும் பேசப்படும் பிரபாகரனுக்கும் அவருக்கும் என்ன ஒற்றுமை உண்டு ?

யாழ் சின்னத்தில் தான் அன்று ஸ்காட்லாந்து அணியினர் போராடினார்கள் என்றால் நம்புவீர்களா ? வாருங்கள் ரத்தத்தை உறையவைக்கும் இச்சமவங்களை ஒருமுறை படித்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் இங்கே படத்தில் பர்க்கும் நபர் தான், வில்லியம் வாலஸ். 1270ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தவர். செல்வந்தராக இருந்த இவரது தந்தை மற்றும் குடும்பத்தை விட்டு விடுதலை வேண்டும் என்று புறப்பட்டார் வில்லியம் வாலஸ். அபோது ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தை தமது பிடியில் வைத்திருந்ததோடு படு அராஜகச் செயலிலும் ஈடுபட்டு வந்தார்கள். 1 வது கிங் எட்வேட் மன்னர் ஆட்சிக் காலத்தில், ஸ்காட்லாந்திற்கு விடுதலை வேண்டும் என்று போராட ஆரம்பித்த வில்லியம் வாலஸ்சின் படையில் பல இளைஞர்கள் இணைந்தார்கள். தம்மால் ஒருபோதும் ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள முடியாது என்று நினைத்து பயந்து ஒதுங்கிய ஸ்காட்லாந்து மக்கள், வில்லியம் வாலஸ் பின்னால் அணி திரண்டார்கள். 1298ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் படையுடன் வந்த ஆங்கிலேயர்களை வில்லியம் வாலசின் படைகள் எதிர்த்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்த படை அணிகளில் பெரும் நாசத்தை விளைவிக்க கூடிய படையணியாக குதிரைப் படை இருந்தது.

அதனை சமாளிப்பது தான் மிகக் கடினம். ஆனால் யுத்த களத்தில் குதிரைப் படைகள் முன்னேறும் இடத்தில் வில்லியம் வாலஸ் அவர்கள் ஏற்கனவே எரிபொருட்களை ஊற்றிவிட்டார். குறித்த இடத்திற்கு குதிரைப் படை வந்தபோது அவர் தனது வில்லில் அம்மை பூட்டி அதில் நெருப்பை கொழுத்தி ஏவியது தான் ஆங்கிலேயர்களுக்கு விழுந்த முதல் அடி. குதிரைப் படை நிலை குலைந்தது. இதனால் புது உட்சாகம் கொண்ட, ஸ்காட்லாந்து படையினர் ஆங்கிலேயப் படையை துரத்தி துரத்தி அடித்தார்கள். இதனால் சற்றும் எதிர்பாராமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினார்கள். இதனால் முதலாம் எட்வேட் மன்னர் பேரதிர்சிக்கு உள்ளாகினார். இனி ஸ்காட்லாந்தை வெல்வது பெரும் இழப்புகளை கொண்டு வரும் என்பதனை அறிந்து, சூழ்ச்சியைக் கையாளலாம் என்று நினைத்தார். 1305ம் ஆண்டு வில்லியம் வாலசை சமாதானம் பேச கிளாஸ்கோ நகருக்கு வருமாறு அழைத்தார்.

இதனை நம்பி வில்லியம் வாலஸ் குறைந்த மெய்பாதுகாப்பாளர்களோடு வந்தார். ஆனால் ஆங்கில அரசு தனது நரிப் புத்தியைக் காட்டியது. சமாதானம் பேசவந்த வில்லியம் வாலஸை கைதுசெய்தார்கள். எட்வேட் மன்னரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் உயிர்பிச்சை தருவதாக கேலிசெய்தார்கள். அவரை அவமானப்படுத்தினர்கள். ஆனால் அவர் எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. போரில் அவரை வெல்லமுடியாது என்று நன்றாக அறிந்துகொண்ட, ஆங்கில அரசு அன்று எப்படி சமாதானம் பேசியதோ அதுபோலவே ஒரு காலத்தில் சிங்கள அரசும் புலிகளோடு சமாதானம் பேசியது. கருணா காட்டிக்கொடுத்தது போலவே வில்லியம் வாலசையும் நம்பவைத்து கழுத்தை அறுத்த ஜீவன் ஒன்றும் உள்ளது. அன் நபரே வில்லியம் வாலசை சமாதானம் பேச செல்லுமாறு வற்புறுத்தியது.

இறுதியில் வில்லியம் வாலசை கொல்லுமாறு மன்னர் உத்தரவிட்டார். இவரது சாவைப் பார்த்து இனி எவரும் போராட வரக்கூடாது என்று கூறினார் மன்னர். அவ்வளவு கொடூரமாக இவரது சாவு மக்கள் மத்தியில் நடக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இறுதிவேளையில் மனம் மாறி வில்லியம் வாலஸ் அவர்கள், தன்னிடம் மன்னிப்பு கேட்க்க விரும்பினால் அவரை கொல்லவேண்டாம் என்றும் கட்டளையிட்டார் முதலாம் எட்வேட் மன்னர். கிளாஸ்கோ நகரில் மக்களை ஒரு அரங்கில் அழைத்து அங்கே பாரிய மரக் குற்றி ஒன்றை போட்டு, அதில் வில்லியம் வாலஸை படுக்க வைத்தார்கள். பாரிய கோடரி கொண்டு அவர் கழுத்தை துண்டாக வெட்டவேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரு புறம் மக்கள் சூழ்ந்து அழுதவாறு கொல்லவேண்டாம் என்று கதறி அழுதார்கள். மறு முனையில் கோடரியை ஒருவன் தீட்டிக்கொண்டு இருகிறான், 1ம் எட்வேட் மன்னனின் முக்கிய மந்திரி அவ்விடத்திற்கு வருகிறார்.

அவர் வந்த பின்னர் கோடரியோடு வந்த அக்கொலையாளி , கோடரியை ஓங்கி வெட்ட முனைகிறான். அப்போது வில்லியம் வாலஸ் அவர்கள், ஏதோ செல்ல எத்தணிக்கிறார். உடனே அவர் மன்னிப்பு கேட்ப்பதாக நினைத்து மந்திரி கோடரியால் வெட்ட வரும் ஆளை நிறுத்தச் சொல்கிறார். ஆனால் வில்லியம் வாலஸ் அவர்கள் சொல்லவந்தது மன்னிப்பு அல்ல ! சத்தமாக "பிரீடம்" என்றால் (அதாவது சுதந்திரம் வேண்டும்) என்றார் ! அவ்வளவு தான் ! மந்திரி ஒரு கணம் திகைத்து போனார், நீ மாறவே இல்லை என்று கூறிவிட்டு கொலைசெய்யுமாறு உத்தரவிட்டார். அந்த மாவீரன் மரணித்த கிளாஸ்கோ நகரில் தான் இன்று தமிழ் ஈழ மக்கள் 23ம் திகதி நீதி வேண்டி போராட இருக்கிறார்கள். எந்த சுதந்திரத்துக்காக 1270ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து போராடி வருகிறதோ, அதற்காகவே ஈழத் தமிழர்களும் போராடி வருகிறார்கள். சுமார் 744 ஆண்டுகளாக இவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் நாம் கடந்த 33 ஆண்டுகளாக தான் போராடி வருகிறோம். இப்படியான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மண்ணை தமிழர்கள் மிதிக்கவே பெரும் பாக்கியம் செய்து இருக்கவேண்டும் அல்லவா ?

“BRAVE HEART” என்னும் ஆங்கிலப் படத்தை முடிந்தால் பாருங்கள் மக்களே: அதன் இறுதிப் பகுதியை நாம் இங்கே தருகிறோம்.
« PREV
NEXT »