Latest News

July 14, 2014

சொந்த சுயநலன்களுக்காக இலங்கையைக் காப்பாற்ற அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முயற்சி!
by Unknown - 0

மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றி அதன் அடிப்படையில் நவநீதம்பிள்ளையால் 10 மாத வரையறையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் டோனி அபோட்டின் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் நடவடிக்கையை முன்கொண்டு செல்கிறது.
எனினும் இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில் இன்னனும் அச்சமும் பயமும் சூழ்ந்துள்ளதாக வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில் இலங்கையில் அகதிகள் தமது நாட்டுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட அந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதன் அடிப்படையில் அண்மையில் கூட அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இலங்கை சமாதானமான நாடு என்று தெரிவித்திருந்தார்.
அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்ற பின்னரும் இந்த கருத்தை அபோட் வெளியிட்டுள்ளமையை இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
« PREV
NEXT »