Latest News

July 04, 2014

வறணியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
by admin - 0

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி வார இதழின் ஊடகவியலாளரான தங்கராசா பிரபாகரன் (வயது 31) தாக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் தென்மராட்சிப்பகுதியில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பருத்தித்துறை வீதியினில் வறணி கறுக்காய் பிள்ளையார் கோவில் அருகாமையில் வைத்து அவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து உடுப்பிட்டியிலுள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த அவரை வறணி பகுதியில் ஆட்களற்ற தரவை வெளியில் வைத்து வழிமறித்த நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலாளிகள் பின்னர் அவரை ஆட்களற்ற வயல் வெளியினுள் தள்ளி விட்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அவரது மோட்டார் சைக்கிளினையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

நாளைய கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு அவரால் எழுதப்பட்ட கட்டுரையொன்றின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அவர் தாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

« PREV
NEXT »

No comments