தாம் உடனிருக்கும் போது மாத்திரம் அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசனை சந்திக்க முடியும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமக்கு கீழ் இயங்கும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமது பிரசன்னமில்லாமல் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க யுஎஸ்எய்ட் நிறுவன தலைவருக்கு அமெரிக்க தூதுவர் சிசன் அனுமதி மறுத்தநிலையிலேயே கோத்தபாய இவ்வாறான மாற்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உள்ளுர் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா அறிவித்துள்ள தெளிவாக்கல் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாட கோத்தபாய ராஜபக்ச, யுஎஸ்எய்ட் நிறுவன தலைவரை நேற்று முன்தினம் இரவு அழைத்திருந்தார்.
எனினும் அமெரிக்க தூதுவர் இன்று தம்மால் இந்த சந்திப்புக்கு வர முடியாது என்று யுஎஸ்எய்ட் நிறுவன தலைவர் தரப்பில் இருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று முதல் இலங்கை படைத்தரப்பினர் அமெரிக்க அதிகாரிகள் உட்பட்ட ஏனைய நாட்டு இராஜதந்திரிகளை வடக்கு கிழக்கில் வைத்து சந்திப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய அறிவித்துள்ளார்.
Social Buttons